Blogger Templates

Wednesday, October 27, 2010

மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? - சகோ.ராஜ்குமார்.


அன்பானவர்களே, படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத்தொடரில் இதுவரை கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? பிசாசு யார்? பூமியில் டினோசர்கள் போன்ற விலங்குகள் அழிக்கப்பட்டது எப்படி? மீண்டும் பூமி புதிதாக உருவாக்கப்பட்டது எப்படி? என்பவைகளைக்குறித்து பைபிள் அடிப்படையில் சுருக்கமாக அறிவியல் ஆதாரங்களோடு பார்த்தோம்.இனி இந்த பூமியில் மனிதன் எதற்காக உருவாக்கப்பட்டான் என்று அறிந்து கொள்வோம்.




பைபிளில் புதிய உடன்படிக்கை யாரோடு செய்யப்பட்டுள்ளது? - சகோ. ராஜ்குமார்


அன்பானவர்களே பைபிளில் ஏற்பாடு என்ற சொல்லுக்கு உடண்படிக்கை எனபதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம், மேலும் பழைய உடண்படிக்கை பன்டைய மெசபடோமியா நாகரீகத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் என்ற பக்திமானோடு செய்யப்பட்டது என அறிந்தோம், இனி புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) பற்றி இங்கே காண்போம்


புதிய உடன்படிக்கை யாரால் ஏற்படுத்த‌ப்பட்டது?
நாம் பழைய உடன்படிக்கை பற்றிய முந்தைய கட்டுரையில் ஆபிரகாமுடன் கடவுள் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி, கடவுளின் எதிர்பார்ப்புப்படி வாழ்ந்த ஆபிரகாமின் வம்சத்தில் வந்த யூத குலத்தில் உலகமக்களின் பாவத்திற்கு பலியாகி உலகமக்களின் நல்வாழ்கையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே புதிய உடன்படிக்கைக்கான ஆதாரம், அவரே இந்தப் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

தேவனின் சமாதானம் !

டாக்டர். பால் தினகரன்

""உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது""
(யூதா 1:2)
என் அன்பு சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடப்போகிறேன் என்று இயேசு கூறுகிறார். இந்த நேரத்திலும் இந்த வார்த்தையை படிக்கிற உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஆண்டவர் தமது சமாதானத்தை ஊற்றப்போகிறார். ஆண்டவராகிய இயேசு, ""சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக"" (யோவான் 14:27). ஏனெனில் அவருக்குள்ளிருக்கும் அதே சமாதானத்தை உங்கள் இருதயங்களில் வைக்கிறார். உங்களுக்குள் இயேசுவின் சமாதானம் இறங்கும். ஏசாயா 9:6-ல் அவருக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது """"சமாதான பிரபு"" என்ற பெயர். யோபு 25:2-ல் அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார் என்று ஆண்டவரை குறித்து வேதம் இவ்வாறாக கூறுகிறது. பிசாசு இவ்வுலகத்திலே சமாதானத்தை கெடுத்துக் கொண்டேயிருக்கிறான். பிசாசின் கிரியைகளின் மூலம் ஒரு மனிதன் மற்றவரது சமாதானத்தை கெடுத்துக் கொண்டேயிருக்கிறான். ஆனால் ஆண்டவரோ நமக்கு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்.