Blogger Templates

Wednesday, October 27, 2010

மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? - சகோ.ராஜ்குமார்.


அன்பானவர்களே, படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத்தொடரில் இதுவரை கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? பிசாசு யார்? பூமியில் டினோசர்கள் போன்ற விலங்குகள் அழிக்கப்பட்டது எப்படி? மீண்டும் பூமி புதிதாக உருவாக்கப்பட்டது எப்படி? என்பவைகளைக்குறித்து பைபிள் அடிப்படையில் சுருக்கமாக அறிவியல் ஆதாரங்களோடு பார்த்தோம்.இனி இந்த பூமியில் மனிதன் எதற்காக உருவாக்கப்பட்டான் என்று அறிந்து கொள்வோம்.




மனிதன் பிசாசை வெட்கப்படுத்த கடவுளால் உண்டாக்கப்பட்டான். என்ன இவன் ஏதோ முட்டாள் தனமாக உளறுகிறான் என்று நினைத்து விடாதீர்கள் கொஞ்சம் பொறுமையாக மேலே படியுங்கள் உங்களுக்கே தெளிவாகப் புரியும்.

இன்றைய உலகில் மனிதன் விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள், ஆகியவைகளில் ஈடுபடும்போது அந்த மனிதன் சமூகத்தால் வெறுக்கப்படுகிறான். காரணம் இவைகள் பூமியில் விழுந்த சாத்தானால் உண்டாக்கப்பட்ட குணநலன்கள் ஆகும். மேலும் மேற்கண்ட குற்றங்களை ஒருவன் மறைவாகச் செய்தாலும், அவனுக்கும், அவனது சந்ததிக்கும் சாபங்கள் வந்து சேர்கிறது என்று நாம் அனைவருமே அறிவோம். மாத்திரமல்ல மறைவாக இவைகளைச் செய்யும் போது வெளித் தோற்றத்திற்கு வேண்டுமானால் அவன் மகிழ்ச்சியோடு இருப்பது போல தோண்றுமே ஒழிய அவனது மனசாட்சி அவனைப் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருக்கும். இதற்கு நானும் நீங்களும் கூட விதிவிலக்கு அல்ல.

இன்னும் ஒரு எளிய உதாரணம் மூலம் சொன்னால், ஒருவன் திருடும் போது சாத்தான் நீ திருடி உனக்காக வைத்துக் கொண்டால் நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லி ஒருவனை ஏமாற்றுவான். இதை நம்பி ஒருவன் திருடினால், அவன் சமுதாயத்தால் இகழப்படுவான். தண்டனைக்கு ஆட்படுவான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சாபத்திற்கும் உள்ளாகிறான்.

ஆனால் ஒருமனிதன் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், ஆகிய நற்பன்புகளை ஒருமனிதன் கடைபிடிக்கும் போது, இயேசு கிறிஸ்து போலவோ, அன்னை தெரசா போலவோ மதிக்கப்படுகிறான். இவைகள் கடவுளின் குணங்கள் ஆகும். இந்தகைய பண்புகளை ஒரு மனிதன் கைபிடிக்க வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம், இத்தகைய பன்புகளை கடைபிடிப்பதன் மூலம் பிசாசு வெட்கப்படுத்தப் படுகிறான்.

இதை ஒரு உண்மைச் சம்பவ உதாரணத்தின் மூலம் அறியலாம், நாம் அனைவரும் அறிந்த ஒரு சம்பவம் மூலமே விளக்குகிறேன்.

காலம் சென்ற அன்னை தெரசா ஒரு சமூக சேவகி அந்தப் பென்மனி ஒரு முறை தொழு நோயாளிகளின் நலனுக்காக நிதி திரட்ட ஒரு செலவந்தரிடம் சென்றார். ஆனால் அந்த செல்வந்தர் அந்த பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி சாத்தானின் குணங்களான கோபங்கள், அசுத்தம், வெறிகள், ஆகிய தன்மைகளைத் தரித்துக் கொண்டவராய் அந்த அம்மையாரின் ஏந்திய கரங்களில் உமிழ்ந்தார்.

ஆனால் அந்த அம்மையார் உணர்ச்சிவயப்படாமல் அன்பு, சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், ஆகிய பன்புகளைத் தரித்துக் கொண்டு, உமிழ்ந்தது எனக்குப் போதும் நோயாளிகளுக்கு ஏதாவது உதவுங்கள் என்று கேட்டார்களாம். அப்போது அந்த மனிதர் தன் செயலுக்கு வெட்கப்பட்டு அந்த அம்மையாருக்கு உதவினார் என்பதாய் அந்த சம்பவம் நீள்கிறது,

அங்கே அந்த மனிதன் வெட்கப்படுத்தப் படவில்லை மாறாக அந்த மனிதனின் வாயிலாக நன்மையானதை வெட்கப்படுத்த வேண்டும் என்ற தீய சக்தியே வெட்கப்படுத்தப்பட்டது.

இப்படி தீய சக்தியை வெட்கப்படுத்தவே கடவுள் இந்த பூமியில் மனிதனை உண்ண்டாக்கினார். நாம் ஓவ்வொருவரும் நன்மையையே செய்ய விரும்புகிறோம். ஆனால் நம்மையும் மீறி பலசமயம் தீமை செய்து விடுகிறோம். எதனால் என்று யோசித்திருக்கிறீர்களா?

ஆம் அதுபற்றிதான் இனி அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்க இருக்கிறோம், மாத்திரமல்ல அதில் இருந்து விடுபட்டு, நமக்கும் நம் வருங்கல சந்ததிக்கும் பாவங்களுக்கு பதிலாக எப்படி ஆசீர்வாதங்களை சம்பாதித்து வைப்பது என்பதையும் நாம் பார்க்கவிருக்கிறோம். அதுவரை காத்திருங்கள்...

1 comment:

  1. Jesus Love to You
    Visit My Blogger and your comments

    http://www.valibar.blogspot.com

    ReplyDelete